அன்பென்ற மழை

அன்பென்ற மழை

கிறிஸ்துமஸ்துக்கு  இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. தேவாலய விடுதியில் ஆரியாள் தன் தோழி சாரா உடன் கிறிஸ்மஸ் தின கேளிக்கை கலை நிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.பாதிரியார் தன் இரு செல்ல பெண்களையும் ஆர்வமோடு அழைத்தவாறே அவர்கள் அறைக்குள் நுழைந்தார்.

புன்முறுவலோடு அவரை வரவேற்ற சிறுமிகள் அவரின் சொற்களுக்காக காத்திருந்தனர்.உங்களுக்குகாக ஒரு பரிசு கொண்டுவந்திருக்கிறேன், கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.கிறிஸ்துமஸ்க்கு முன்னமே பரிசா.. அது என்னனு சொல்லுங்க பாதர்,ரொம்ப ஆர்வமாக இருக்கு. ம்ம்..நீங்கதான் கண்டுபிடிக்கனும், சீக்கிரம் சொல்லுங்கள்.

எங்களுக்கு தான் கண் பார்வை கிடையாதே என்று குரலை தாழ்த்தினதும் சற்றும் தாமத்திக்காமல் உங்களை அரவணைக்க ஒரு தம்பி வந்துள்ளான் என்று மெல்ல தன் கைகளில் உறங்கும் சிசுவை தாங்கினார்.என்ன சொல்றிங்க புரியல, எங்களுக்கு தம்பியா. ஆமா ஆரியாள், உங்களை போல இவரும் ஒரு கர்த்தரின் பிள்ளை தான். இவரை பெற்றவர் இந்த பச்சிளம் மழலையை தேவாலய வாயிலில் வெண்ணிற ஆடையோடு விட்டுச்சென்றுள்ளனர்.

அதற்குள் துயில் கலைந்த தேவன் மகன் அழுகை மொழியால் அவர்களுக்கு தன் இருப்பை அவர்களுக்கு நிரூபித்தான்.பாதர் எங்களால் இந்த பரிசை காண முடியாது, இறைவனால் அனுப்பப்பட்ட துணை சகோதரனை எங்கள் கரங்களும் கண்ணீரும் கொண்டு தழுவி வாழ்த்து சொல்கிறோம் என நனைந்த கன்னங்களை துடைத்து புன்னகை செய்தனர்.

மௌனம் பேசியது.இருவரும் இளம் சிசுவின் புனிதமான மென் ஸ்பரிசத்தை தீண்டல் செய்து தங்கள் இளவரசனை கண்டு ரசித்தனர். தங்களை போன்றே கைவிடப்பட்ட அந்த சேயை எண்ணி இருவரும் வருந்துவதை கண்ட பாதிரியார், சரி நாம கொண்டாட துவங்கலாமா என்றார்.

ஆனால் கிறிஸ்துமஸ் வர இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதே.இல்லை மகளே நமது சிசுபாலன் இன்று நம்மை வந்து சேர்ந்துள்ளார். இதுவே நம்முடைய கிறிஸ்துமஸ் தினம்.வாருங்கள் கொண்டாடுவோம்.

 

Your email address will not be published. Required fields are marked *

*

Translate »