கடல் சிறகுகளை காப்போம்

கடந்த இரண்டு தலைமுறை களுக்குள் நெகிழிகளை(Plastic) உண்ணும் கடல் பறவைகளின் எண்ணிக்கை அபாய அளவை கடந்து விட்டது. அதாவது 1980 ஆம் ஆண்டு 10% மாக இருந்த இந்த கணக்கெடுப்பு தற்போது 90% உயர்ந்துவிட்டது.

ஆராய்ச்சி யாளர்களின் கூற்றுப்படி கடலில் ஒவ்வொரு சதுர மைலுக்கும் கிட்டத்தட்ட 3,60,000 நெகிழி கழிவுகள் இருக்கிறது. கடல் பறவைகள், ஆமைகள் மேலும் சில வகை மீன்களும் இவற்றை உணவென்று தவறுதலாக விழுங்கி விடுகின்றன.

In this photo taken in 2013, provided by Britta Denise Hadety,a red-footed booby on Christmas Island, in the Indian Ocean. As many as nine out of ten of the world’s seabirds likely have pieces of plastic in their guts.

அப்படி விழுங்கப்படும் நெகிழிகள் குடலில் சென்று தங்கிவிடுகின்றன.பல நேரங்களில் உண்ணும் போதே தொண்டையில் அதாவது உணவுக்குழலிலே சிக்கிக் கொண்டு அவற்றின் உயிருக்கே பாதிப்பு ஏற்படுகிறது.

சமீபத்தில் அப்படி ஒரு ஆமையின் உயிரை காப்பாற்றும் ஒளிப்படம் பரவலாக சர்ச்சை ஆனது.

ஒவ்வொரு தனி மனிதனும் அவரது பழக்கங்களும் இந்த சம்பவங்களுக்கு நிச்சயம் பொறுப்பாகின்றன.

நாம் நமது வழக்கத்தை மாற்ற விடில் குடலில் நெகிழிகள் சேர்ந்த இந்த 90% கடல் பறவைகள் 2050 ஆம் ஆண்டு 99% மாக மாறி பின்னாளில் அருங்காச்சியக பொருளாகி விடும்.

முக்கியமாக ஆஸ்திரேலியா நியூசிலாந்து இடையேயான கடல் பகுதி பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார ரீதியான வளர்ச்சியும் மக்காத குப்பைகளின் பயன்பாடும் தான் என Discovery News அறிவித்துள்ளது.

குப்பைகள் எங்கு வேண்டுமானாலும் கொட்டப்படுகின்றன.பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி அல்லது சேகரிக்க எல்லோரும் அக்கறை கொள்ளவில்லை.

 

Your email address will not be published. Required fields are marked *

*

Translate »