July 2016

1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டி, பி.டி.உஷா 100 மீட்டர் தடகளத்தில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு மயிரிழையில் பதக்க வாய்ப்பை தவற விட்டார்.பதக்கமின்றி அவர் தாயகம் திரும்பினாலும் அவரை நாம் இன்னமுன் இந்தியாவின் தங்க மங்கையாகவே அடையாளம் காண்கிறோம்.

36 வருடங்கள் ஆகியும் தணியவில்லை இந்த தங்க தாகம், அதன் பின்னர் ஒலிம்பிக் மகளிர் 100 மீ போட்டிகளில் இந்தியர் யாரும் தகுதி பெறவுமில்லை.மெல்ல கலைந்து கொண்டிருந்த இக்கனவில் மீண்டும் வண்ணம் தீட்டியுள்ளார் டூட்டி சந்த்.

tumblr_n9a06z2iGy1rd1aw5o1_1280

கஜகஸ்தானில் அல்மாட்டி ரியோ ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்திய தரப்பில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட டூட்டி சந்த் 11.30 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்தார்.

இதன் மூலம் 1989 க்கு பிறகு ஒலிம்பிக்கில் 100மீ மகளிர் தடகளப் போட்டியில் பங்குபெறப் போகும் வெற்றியாளர் ஆகிறார்.

பின்னர் அதே சந்தர்ப்பத்தில் நடந்த மற்றோரு போட்டியில் 11.24 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றார். இதனால் தேசிய சாதனையான 11.33 வினாடியை உடைத்தெறிந்தார்.

2014 ல் ஆண்களுக்கு உண்டான ஹார்மோன் அதிகமாக சுரப்பதாக கூறி, தடைக்கு உள்ளான இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் எனப்து குறிப்பிடத்தக்கது.

வருகிற ஆகஸ்ட் 5 ஆம் திகதி 13 பிரிவுகளில் Continue reading ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பீனிக்ஸ் டூட்டி சந்த்

Read more

கேரளாவின் திருச்சூரில் உள்ள அழகிய கிராமம் மரோட்டிச்சல்(Marottichal). பல அழகான இயற்கை தலங்கள் கொண்ட இவ்விடம் பலரால் அறியப்படாத சுற்றுலா தலம்,ஆனால் அவ்வூரில் உள்ள உன்னிகிருஷ்னண் உணவகத்தை உலகில் பலருக்கு தெரியும்.

%e0%b4%ae%e0%b4%b0%e0%b5%8b%e0%b4%9f%e0%b5%8d%e0%b4%9f%e0%b4%bf%e0%b4%9a%e0%b5%8d%e0%b4%9a%e0%b4%be%e0%b5%bd_%e0%b4%b5%e0%b5%86%e0%b4%b3%e0%b5%8d%e0%b4%b3%e0%b4%9a%e0%b5%8d%e0%b4%9a%e0%b4%be%e0%b4%9f

60-70 களில் இந்த பகுதியில் குடித்தனம் வாழ்ந்தவர்களில் பெரும்பங்கு குடியோடு வாழ்ந்திருக்கின்றனர். கள்ளுக்கு அடிமையாகிய ஆண்களால் ஒவ்வொரு குடும்பமும் அளப்பரிய துன்பத்தை அனுபவித்தது.குடும்ப தகராறும் வன்முறையும் தெருவெங்கும் அரங்கேறியது.

எல்லை மீறிய குடிப்பழக்கம் தொடர இந்த ஊர் மக்கள் சேர்ந்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்..அதிகாரிகள் தினமும் ரோந்து வந்து கிராமத்தை கட்டுக்குள் கொண்டுவர துவங்கினர்,அதுவரை போதையை பொழுதுபோக்காக கொண்டவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அதே சமயம் சமகால நிகழ்வாக பாபி பிஷ்ஷர் என்பவர் உலகின் சதுரங்க வெற்றியாளராக முடிசூடினார்.உலகின் எல்லா செய்திதாள்களிலும் அது வெளியானது,இந்த கிராமத்து இளைஞன் உன்னிகிருஷ்ணன்(16) கையிலிருந்த செய்திதாளில் அவரது சதுரங்க நுணுக்கத்தை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருந்தான்.

Continue reading சதுரங்கத்தால் மதுவை வீழ்த்திய கிராமம்

Read more

பிராஸர்பினா என்பவள் ரோமானிய புராண கதைகளில் வசந்த கால தெய்வமாகவும் பாதாள உலக ராணியாகவும் வணங்கப்படுகிறார்.

பிராஸர்பினாவை பாதாள கடவுள் கடத்தி செல்லும் பிரபல புராணக்கதை அங்கு இன்னும் மைய கருவாக பல ஆக்கபூர்வமான கலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கதையில் வரும் கால மாற்றத்தால் அவள் மறுமலர்ச்சியின் தேவியாகவும் கருதப்படுகிறார்.

Dante_Gabriel_Rossetti_-_Proserpine

இவள் கதை கிரேக்க புராணங்களில் வரும் பூமி கடவுளான டிமிடெரின் மகளான பெரிசிஃபோனை(Persephone) தழுவியது. கிரேக்கத்திலிருந்து தழுவிய இந்த இறைவி பின்னாளில் ரோமானிய கலை இலக்கியத்தில் முக்கிய மறுமலர்ச்சியை தோற்றுவித்தாள்.

கி.பி.205 ஆம் ஆண்டில் தான் பிராஸர்பினா கடவுள் ரோமானியருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவளுக்கு தாயாக ஏற்கனவே கிரேக்கத்தில் இருக்கும் டிமிட்டெரிக்கு இணையான ரோமனின் புவிக்கடவுளான சீரிஸ்(Ceres) இருந்தார்.

விவசாய துவக்கத்தின் போதும் பிராஸர்பினா வணங்குவதால் விளைச்சல் பெரும் என்பது அவர்களிடம் இன்றளவும் நிலவும் நம்பிக்கை.

Continue reading யுவதி பிராஸர்பினாவும் பாதாள கடவுளும்

Read more

இன்னும் நம்மில் பலர் மார்ஷ்மல்லோ(Marshmallow) பதிப்பையே உபயோப்படுத்த துவங்கவில்லை, ஆனால் கூகுளோ தனது அடுத்த பதிப்பிற்கான பெயரை நேற்று தேர்ந்தெடுத்துவிட்டது.

Android-Nougat-logo

பொதுவாக ஆண்ட்ராய்டு பதிப்பின் பெயர்களை கூகுள் நிறுவனமே தேர்ந்தெடுக்கும்.

ஆங்கில அகர வரிசையில் பெயரிடப்பட்டு வரும் இதன் பதிப்புகளில் புதிய வகையான N பதிப்பிற்கு மக்களிடமே கருத்துக்கணிப்பு நடந்தது.

Introducing #AndroidNougat. Thank you, world, for all your sweet name ideas! #AndroidNRevealpic.twitter.com/7lIfDBwyBE

— Android (@Android) June 30, 2016

Neyyappam.jpg

இந்தியாவில் பலரும் ஒருமனதாக நெய்யப்பத்திற்கு வாக்களித்தனர், இருப்பினும் Nougat இனிப்பு வகை இறுதியில் வாகை சூடியிருக்கிறது. எனவே மக்களால் பெயரிடப்பட்ட முதல் ஆண்ட்ராய்டு பதிப்பாக இது வலம் வரும்.

இதுவரை Android-N என அறியப்பட்டு வந்த பதிப்புக்கு அதிகாரப்பூர்வ பெயராக Android-Nougat வழங்கப்பட்டது. முதலாவதாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட இப்பதிப்பு தற்போது Beta நிலைக்கு வந்துள்ளது, அதாவது வெளியிடுவதற்கான முந்தைய நிலை.

மேம்பட்ட அறிவித்தல்(Notifications),ஒரே நேரத்தில் இரு வகையான திரைகளை பயன்படுத்தும் வசதி (Multi-Window Support), மார்ஷ்மல்லோவில் இருப்பது போல Doze Mode வசதி போன்ற புதுமைகளோடு கோடையில் வெளியாக ஆயத்தமாக உள்ளது NouGet.

கூகுள் இப்படியாக இனிப்பு பண்டங்களின் பெயரை தனது இயங்குதளத்திற்கு வைப்பதை தனி முத்திரையாகவே மாற்றிவிட்டது. ஆனால் கூகிள் மட்டுமே அப்படி இல்லை. விண்டோஸ் நகரங்கள், இடங்கள் போன்றவற்றையும்(Microsoft Metro), ஆப்பிள் புலி இனங்களின் பெயரையும் பயன்படுத்தும்(Cheetah, Jaguar, Panther, Lion, etc.), ஆனால் பிரபலம் இல்லை.

இனி முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்புகளை பற்றி சற்று பார்ப்போம். Continue reading தித்திக்கும் ஆண்ட்ராய்டு பதிப்புகள் – சுவாரஸ்ய தகவல்கள்

Read more
Translate »