September 2017

புகழ்பெற்ற டார்சன் கதாபாத்திரம் பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். வனத்தில் எல்லா மிருகங்களுடன் உறவாடி சாகசம் செய்து அசத்துவார். விழுதுகளை பற்றிக் கொண்டு மரம்விட்டு மரம் தாவி கேளிக்கை செய்து நம்மை குதூகலிக்க வைப்பார்.

குழந்தை முதலே குரங்குகள் தான் அவரை பாலூட்டி வளர்க்கும், மற்ற விலங்குகளும் அரவணைக்கும். ஆனால் நிஜத்தில் கானகத்தில் வளர்வது அவ்வளவு மகிழ்வானதா!

மனிதர்களால் தனிமைபடுத்தப்பட்டு வனவிலங்குகளால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை பற்றிய கதைகள் உலகெங்கும் ஆங்காங்கே விரவி கிடக்கின்றன.

புனைவுக்கும் மெய்க்கும் இடைப்பட்ட இக்கதைகளில் சில ஆதாரமிக்கவை, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உறவை நீட்டித்த சந்தேகத்துடன் கேள்விக்குள்ளாக்குபவை.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு மற்றும் காட்டுப்பகுதிகளில் பயணிக்கும் போது தொலைவுற்ற பல்வேறு குழந்தைகள் பிற்காலத்தில் விலங்குகளோடு மீட்கப்பட்டுள்ளனர்.

மனிதர்களின் சுபாவத்தை அறைகுறையாக அல்லது முற்றிலுமாக இழந்துவிடும் இவர்களை கான்வளர் குழந்தைகள், காட்டான் குழந்தைகள்(Feral Child) என குறிப்பிடபடுகின்றனர்.

சமீபத்தில் மார்ச் 2017 ல் உத்திரப்பிரதேசத்தில் குரங்குகளோடு வாழ்ந்த ஒரு சிறுமி மீட்கப்பட்டது பரவலாக பேசப்பட்டது.

மருத்துவமனையில் சமைத்த உணவுகளை அவர் உண்ண மறுத்தார், பேச முடியாமலும் நான்கு கால்களில் நடக்க முயல்வதுமாய் இருந்தார்.

Continue reading அமலா கமலா | ஓநாய் குழந்தைகள்

Read more
Translate »