Animals


பூமி இதுவரை ஐந்து மிகப் பெரிய பேரழிவை சந்தித்திருக்கிறது. கடைசியாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பேரிடர் டைனோசர் இனத்தின் தடத்தை அழித்தது.

கடந்த தலைமுறையிலேயே இதை பற்றி தெரிவித்த அறிவியலாளர்கள் தற்போது ஆறாவது அழிவு (Sixth Extinction or Holocene extinction) நாம் நினைப்பதை விட வேகமாக நிகழந்து கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இயல்புக்கு மாறான விலங்கினங்களின் அதிகப்படியான அழிவு சரிவிகிதம் மற்றும் புவியியல் மாற்றங்கள் அதனை உறுதிபடுத்துவதாகவே உள்ளன.

0a48b23e676e34ccc4df9232f301a237.png

ஏற்கனவே பல்வேறு விலங்கினங்கள் காக்கப்படவேண்டிய பட்டியலில் இருக்கும் நிலையில் அவற்றின் வன உயிரியல் நிர்மூலமாதல்(Biological annihilation) சதவீதம் 110 ஆக அதிகரித்துள்ளது. 1990 முதல் இதுவரை 400 மேற்பட்ட கடல்-நில வாழ்பவை முழுவதுமாக அழியும் நிலையை சந்தித்துவிட்டன.

பல்வேறு முதுகெலும்பு விலங்குகள் தங்கள் பிழைக்கும் ஆற்றலை 30-40% மேல் இழந்து வருகின்றன. மனித குரங்குகள், புலி இனங்கள் தாங்கள் ஆளும் பகுதியில் உயிர்பிழைக்கும் திறன் 20% ஆக சரிந்துள்ளது.இதனால் உயிர் சங்கிலி பாதிப்படைந்து பல இனங்கள் மறைந்துபோக வாய்ப்புள்ளது.

விலங்குகளின் அவற்றின் மூன்றில் ஒரு பங்கு குணாதிசயத்தை மெல்ல இழந்து வருகின்றன.

திடுக்கிடும் இயற்கை மாற்றாத்தால் தங்களது இயல்பை பல விலங்கினங்கள் இழந்துவிட்டன. இன்றைய நிலையில் 20000 சிங்கங்கள், 7000 சிறுத்தைகள், 1000 பாண்டாக்கள் மற்றும் 250 சுமத்ரா காண்டாமிருகம் மட்டுமே புவியில் உள்ளது. Continue reading பூமியின் ஆறாவது அழிவு தொடங்கிவிட்டது

Read more

நாகமாணிக்கம்

நாகமாணிக்கம் உண்மையா என்கிற விவாதங்கள் ஏதோ ஒரு மூலையில் இந்த நொடியில் கூட பேசப் பட்டுக்கொண்டிருக்கும். அந்த அளவிற்கு இந்த அதிசய கல்லை பற்றிய செய்திகள் இந்திய தெருக்களில் பரவிக் கிடக்கின்றன.

எண்ணற்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூட இதை பற்றிய குறிப்புகள் உள்ளன. மர்மங்கள் சுவாரசியமானவை, நம்மை தேடலுக்கு உட்படுத்துபவை. அந்த உந்துதலே நாக மாணிக்கத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

நாகமாணிக்கத்தை சினிமா வழியாகவோ அல்லது நமக்கு தெரிந்தவர் அவர் கேள்வி பட்டதாய் சொன்ன கதையினாலோ நாம் அறிந்திருப்போம்.

இந்த கதைகளின் பொது அம்சமான வரும் நாகம் 100 வருடங்கள் தங்கள் விஷத்தை உபயோக்கிக்காது, ஏதும் யாரையும் தீண்டாமல் அது காத்து வரும் அதன் விஷம் காலப்போக்கில் நாகரத்தினமாக மாறும். சுனை அருகே வெறும் பச்சை தவளைகளை மட்டுமே உண்டு இது உயிர் வாழும்.

ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். இப்படிப்பட்ட நாகங்கள் சாதுக்கள் போல முதுமை என்பதே கிடையாது, சுமார் 110-150 ஆண்டுகள் வரை வாழக்கூடியன.

நாகமாணிக்கம்.jpg

கண்கூசும் அளவிற்கு பகலில் கூட மிக பிரகாசமாக மின்னும் அந்த ரத்தினத்தை அமாவாசை இரவில் கக்கி எடுத்து அதன் வெளிச்சத்தில் வேட்டையாடும். இது போன்ற சமயத்தில் தான் நம் கதைகளில் வரும் நபர் மாட்டின் சாணத்தையோ அல்லது பொடியையோ அந்த நாகமணியின் மீது வீசுவார்.

நாகம் சற்று குழம்பி அவ்விடத்தை விட்டு சென்றபின் மரத்தின் மேல் மறைவாக இருந்த நாயகன் நாகமணியை கைப்பற்றிக் கொள்வான்.

வராகமிகிரரின் பிருகத்சம்கித புராணத்தில் நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் செய்வான் என சொல்லப்பட்டுள்ளது. Continue reading நாக மாணிக்கம் – பிரபஞ்ச இருளில்

Read more

கடல் மீனவர்கள் பயணிக்கும் போது பல விந்தையான ஆழ்கடல் அதிசயங்களை காண நேரிடுவதுண்டு.

மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு மீனவர்கள் பசுபிக் கடலில் பயணம் செய்யும் வேளையில் சற்று மர்மமான ஒரு மிதக்கும் உருண்டையை கண்டனர், அது பார்ப்பதற்கு மிகப்பெரிய பலூன் அல்லது வேற்றுகிரக பொருள் போல காட்ச்சியளித்துள்ளது.

நடுகடலில்-மீனவர்களை-அதிர்ச்சியில்-உறையவைத்த

மார்க் வாட்கின்ஸ் அவருடைய தந்தையுடன் கடலுள் உலவும் வேளையில் எடுத்த தற்போது வைரலாக பரவிக் கொண்டிடுக்கும் இந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியுள்ளார்.

ஒருவேளை ஏதேனும் வித்தியாசமான கப்பலாக இருக்கும் என்று எண்ணி அருகில் சென்றவர்கள் ஆச்சயர்யத்தில் அது பொருள் அல்ல ஒரு இறந்த போன திமிங்கலத்தின் உடல் என்பதை கண்டறிந்தனர்.

இறந்த திமிங்கிலம்.jpg

அருகே சென்றதும்தான் அதன் துர்நாற்றத்தை உணர் ஆரம்பித்திருக்கிறார்கள். விலங்குகளில் உடலில் வெளியேறும் வாயுக்களால் அந்த இறந்த திமிங்கல உடல் உப்பி வெளிறி காணப்பட்டது.

அதிர்ந்து போனவர்கள் Continue reading மீனவர்களை உறைய வைத்த அதிசய திமிங்கலம்

Read more

வௌவால்கள் பறவையா பாலுட்டியா?

வௌவால்கள் பாலுட்டி இனத்தை சேர்ந்தது, பாலுட்டிகளில் பறக்கவல்ல ஒரே இனம் வௌவால்கள் தான்.முதுகெலும்பு உள்ள இவை ஆந்தைகளைப் போலவே இரவில்தான் செயல்படும்.இவற்றின் முன்னங்கைகளே இறக்கைகளாக பரிணமித்துள்ளன. இறக்கை கால் மற்றும் முதுகு புறம் வரை ஜவ்வு போல இணைந்து அமைந்திருக்கின்றன.

வௌவால்கள் பார்ப்பதற்கு எலிகளின் வழிதோன்றல் போல இருப்பினும் இவை தனிப்பட்ட பரிணமித்த வகையை சேர்ந்தது .கிட்டத்தட்ட 52 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த வௌவால் தடயங்கள் கூட கிடைத்துள்ளன.

Divider R

வௌவால்களுக்கு கண் தெரியுமா?

மனிதனால் 80 முதல் 20 ஆயிரம் அதிர்வெண் அலைகளை உணர முடியும்,அதே சமயம் வௌவால்களால் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் வகையான ஒலி அலைகளை உணர முடியும்.

ஏன் வௌவால் தலைகீழாக தொங்குகிறது?

இரவில் பறக்கும் போது மீயொலி அலைகளை அனுப்பி அவை எதிரில் இருக்கும் சுவர் அல்லது பொருட்களில் மீது மோதித் திரும்ப வருவதைக் கொண்டு அதன் தொலைவைக் கணக்கிடும் தகவமைப்பு அதற்கு உண்டு.

இத்தகவமைப்பின் மூலம் எதிரில் இருக்கும் பொருட்கள் அல்லது உயிரினங்கள் இருக்கும் தூரத்தை மட்டுமல்ல உடல் அளவைக்கூட கண்டுபிடிக்க முடியும்.

வௌவால்களுக்கு பார்வைத் திறன் உண்டு,ஆனால் அவற்றின் கண்கள் பெரிதாக பரிணாம வளர்ச்சி அடையாதவை.மேலும் அவை உணவிற்காகதான் மீயொலிகளை உபயோக்கிறது, இனப்பெருக்கம் போன்ற மற்ற செயல்களுக்கு அவை தன் கண்களையே பயன்படுத்துகின்றன.

உலகின்  சிறிய வகை வொவால் 2.4 இன்ச் (3 CM) மற்றும் பெரிய வௌவால் 5.6 (1.8 M) அடி உயரம் ஆகும்.

Divider R

ஏன் வௌவால் தலைகீழாக தொங்குகிறது?
Continue reading வௌவால் – இரவுலகின் சாத்தான்கள்

Read more

இந்தியாவில் மட்டுமே உள்ள கங்கை டால்பின்களுக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஓடும் ஹூக்ளி நதியின் இந்த அரிய வகை டால்பின்களை பாதுகாப்பதற்காக, நீர் சரணாலயம் அமைக்க மேற்கு வங்க வனவுயிர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இன்னும் ஓராண்டுக்குள் சுந்தர்பன் அல்லது மால்டா பகுதியில் சரணாலயம் அமைக்கப்படும். ‘சூசூ'(Souns or Susu) என்று அழைக்கப்படும் கங்கை நதி டால்பின்கள், இந்தியாவின் தேசிய நீர் விலங்கினமாக, 2010ல் அங்கீகரிக்கப்பட்டது.

Teachers book on Ganges River Dolphin

சமிபத்திய கணக்கெடுப்பின் படி 2,500 முதல் 3000 என்ற எண்ணிக்கையில் மட்டுமே உள்ள இந்த டால்பின் இனம் அழியும் ஆபத்தில் இருக்கிறது.

கங்கை நதி டால்பின்கள், இந்தியாவின் தேசிய நீர் விலங்கினமாக, 2010ல் அங்கீகரிக்கப் பட்டது.

bycatch_ganges_river_dolphin_platanista_gangetica_dead_carcass_people_fishing_nets_on_boat_india_vikramshila

கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா, கர்ணபுலி மற்றும் சங்கு ஆகிய நதிகள் ஓடும் இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேச பகுதிகளில் மட்டுமே கங்கை நதி டால்பின்கள் வாழ்கின்றன(80% இந்தியாவில் உள்ளன).

பாலூட்டி வகையைச் சேர்ந்த இவை,‘கங்கை நீர்ப் புலி’ என்று செல்லமாக அழைக்கப் படுகின்றன.நதி நீர் டால்பின்கள், கடல் டால்பின்களை விட சுலபமாக வேட்டையாடி விடப்பட கூடியவை.கங்கையின் சுற்றுச்சூழல் இவற்றின் வாழ்வியலை வெகுவாக பாதிக்கிறது.

மிகப்பெரும் அச்சுறுத்தலான நீர் மாசுபாடு, மின்சார உற்பத்தி, எண்ணெய் கலப்பு, நீருக்கடியில் ஏற்படும் இரைச்சல் முக்கியமாக மக்கள்தொகை அதிகரிப்பு போன்ற காரணத்தால் டால்பின்களின் இனச்சேர்க்கை தடைப்படுகிறது.

மேலும் வேதிப்பொருள்களின் கலப்பு, கப்பல்களின் நெரிசல், மிதமிஞ்சிய மீன் பிடித்தலால் அந்த இனம் விரைவில் அழிவை நோக்கிப் போய்விட்டதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Read more

Scroll down to read this article in English

சீனாவில் சுண்ணாம்புப் பாறைகளுக்கு அடியில் உலகின் மிகச்சிறிய நத்தை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆய்வாளர்கள் இந்த நத்தைக்கு, ‘அகஸ்டோபிலா டோமினிகே'(Angustopila dominikae) என்று பெயரிட்டு இருக்கின்றனர்.

0.3 இன்ச் அளவு உயரமும் 5 மி.மீட்டருக்கும் குறைவான அளவிலும் உள்ள இந்த நத்தையே உலகின் மிகச்சிறிய நத்தையாக இருக்கும் என இதை கண்டுபிடித்த வல்லுனர் குழு கருதுகிறது.

ஒரு ஊசியின் துவாரத்தில், 10 நத்தைகளை வரிசையாக வைக்கக் கூடிய அளவுக்கு இவை சிறியவை என்றால் இதன் உருவத்தை கற்பனை செய்து பாருங்கள்.

Continue reading உலகின் மிகச்சிறிய நத்தை!

Read more

கடந்த இரண்டு தலைமுறை களுக்குள் நெகிழிகளை(Plastic) உண்ணும் கடல் பறவைகளின் எண்ணிக்கை அபாய அளவை கடந்து விட்டது. அதாவது 1980 ஆம் ஆண்டு 10% மாக இருந்த இந்த கணக்கெடுப்பு தற்போது 90% உயர்ந்துவிட்டது.

ஆராய்ச்சி யாளர்களின் கூற்றுப்படி கடலில் ஒவ்வொரு சதுர மைலுக்கும் கிட்டத்தட்ட 3,60,000 நெகிழி கழிவுகள் இருக்கிறது. கடல் பறவைகள், ஆமைகள் மேலும் சில வகை மீன்களும் இவற்றை உணவென்று தவறுதலாக விழுங்கி விடுகின்றன.

In this photo taken in 2013, provided by Britta Denise Hadety,a red-footed booby on Christmas Island, in the Indian Ocean. As many as nine out of ten of the world’s seabirds likely have pieces of plastic in their guts.

அப்படி விழுங்கப்படும் நெகிழிகள் குடலில் சென்று தங்கிவிடுகின்றன.பல நேரங்களில் உண்ணும் போதே தொண்டையில் அதாவது உணவுக்குழலிலே சிக்கிக் கொண்டு அவற்றின் உயிருக்கே பாதிப்பு ஏற்படுகிறது.

Continue reading கடல் சிறகுகளை காப்போம்

Read more
Translate »