Culture

ஒரு தேசத்தின் அடையாளம் அதன் புதுபிக்கப்பட்ட வரலாற்று பதிப்புகளிலும் புதைந்தெழும் தொல்லியல் சான்றுகளிலுமே மேன்மையடைகிறது.

ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தபட்ட அகழ்வாய்வுகள் நம் பராம்பரியத்தின் வேரை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.

தற்போது அதனை மிஞ்சும் தொன்மை ஆதாரத்தின் எச்சமாய் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது அழகன்குளம்.

சங்க காலத்தில் பாண்டியர்களின் முக்கிய வணிக தலமாக இருந்துவந்துள்ள அழகன்குளம் ராமநாதபுரத்திற்கு அருகே வங்க கடலில் வைகை நதி கலக்கும் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை கிராமம்.

1986-87 ல் தொடங்கிய அகழ்வாய்வு பணி ஏழு கட்டமாக நடைபெற்று இதுவரை 12,000 மேற்பட்ட பழங்கால தொல்பொருட்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

மிக சிறிய பகுதியில் நடத்தப்பட்ட இந்த அகழ்வாய்வு, தமிழக அரசின் ஒப்புதலின் பெயரில் இந்த வருடம் மே மாதம் முதல் தீவிரமாக நடைபெற்று 59 இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

பண்டைய தமிழ் சமூகத்தின் பழந்தன்மையை எடுத்து கூறும் வகையில் அம்மக்கள் பயன்படுத்திய ஆபரணங்களான சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண் மணிகள், கண்ணாடி, இரும்பு மற்றும் யானைத் தந்தத்தாலான பொருள்கள் வெளிக்கொணர பட்டுள்ளன.

மிகப்பெரிய குடுவைகள், விதை சேமிப்பு கலன்கள் மேலும் ஹரப்பா நாகரீகத்தில் வழக்கத்தில் இருந்த குறியீடு என்று கருதப்படும் உருவம் பொறித்த தொல்பொருள் ஆதாரம் ஒன்றும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue reading அழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்

Read more

கொரிய நாட்டின் கிம் மக்கள் தங்கள் வம்சத்தின் தாயாக கருதும் ஒரு பெண்ணரசியை வணங்க இந்தியா நோக்கிய ஒரு யாத்திரையை வருடா வருடம் மேற்கொள்கின்றனர்.

இதற்கு காரணமாக இருப்பது கொரியாவின் பண்டைய கயா பேரரசின் முதல் ராணி இந்தியாவில் இருந்தே அங்கு குடியேறினார் என அவர்களின் வரலாற்று குறிப்புகள் கூறுவதே.

ஹியோ ஹியாங் ஓக் (Heo Hwang Ok) என்ற பெயர் கொண்ட அவர்தான் கொரியா நாட்டு வரலாற்றில் முதல் அரசியும் ஆவார். அவருக்கு இந்திய – கொரிய தூதரங்களால் அவரின் தாய் தேசமான அயோத்தில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

ஆனால் அயோத்திக்கும் அவருக்கும் தொடர்பில்லை, அவள் ஒரு தமிழ் தேச இளவரசி என சமீபத்தில் வரலாற்றாளர்கள் சாட்சியளிக்கின்றனர். அப்படியானல் அயோத்தியில் ஏன் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது என தெரிவு கொள்ள வேண்டியதை பற்றியதே இந்த பதிவு.

இல்யோன் என்ற புத்த துறவி 13 ஆம் நூற்றாண்டில் பண்டைய கால கொரிய தேசத்தின் வரலாற்றையும் புனை சரித்திரங்களையும் தொகுத்து சம்குக் யுசா(SAMGUK YUSA) என்ற மூவேந்தர் வரலாற்றை எழுதினார்.

அவர் குறிப்பிட்டுள்ள பண்டைய நாயகர்களின் சாகச இதிகாச புராண கதைகளில் தான் இந்த அரசியை பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன. Continue reading செம்பவளராணி – முதல் கொரிய அரசி

Read more

கர்நாடகா மாநிலத்தின் சிமோகா நகரத்தின் அருகில் உள்ள கிராம் மக்கள் பெரும்பாலும் அனைவருமே சமஸ்கிருத மொழியை பேசுகிறார்கள். இந்தியாவில் இன்னமும் சமஸ்கிருத மொழி வழக்கில் உள்ள அரிய இடங்களில் மத்தூர் கிராமமும் ஒன்று.

சமஸ்கிருதம் உலகின் பழமையான மொழிகளின் ஒன்று. லத்தீன், கிரீக் மொழிகளோடு ஒப்பிடதகுந்த இந்திய மொழி. இந்தியாவின் புராண இதிகாசங்கள், வேதங்கள் எல்லாம் இம்மொழியில் உருவாக்கப்பட்டது தான். ஆனால் நவீன இந்தியாவில் இந்தி போன்ற வழக்கு மொழிகளால் சமஸ்கிருதம் வழக்கற்று போனது. நடைமுறையில் பயன்படுத்தும் பழமையான மொழிகளில் தமிழ் மட்டுமே உயிர்த்துள்ளது.

இந்திய- ஆரிய நாகரீகத்தின் தாக்கமே சமஸ்கிருதத்தின் உருவாக்கம், மேலும் பல இந்திய மொழிகளுக்கு இதுவே அடிப்படை, தென்னிந்திய மொழிகளுக்கு தமிழ் போல.

sanskrit-class

புராதாண மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தை இவர்கள் தினசரி பேச்சு வழக்கில் இன்றும் உயிர்ப்போடு வைத்திருப்பாதல் இந்த கிராமம் மொழி ஆர்வலர்களால் பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. டெல்லியில் உள்ள சமஸ்கிருத மொழி பாதுகாப்பு மையம் தனது ஒரு கிளையை இங்கேயும் தொடங்கியுள்ளது.

தற்போது உலகில் 1% அள்விலேயே சமஸ்கிருதம் பேசப்படுகிறது, அதுவும் பிராமண பூசாரிகள் பயன்படுத்துவதே. ஜெர்மன்,பிரென்சு போல பள்ளி கல்லுரிகளில் கடினப்பட்டு பயலும் இந்த மொழியை இங்குள்ள பாமர மக்களும் சகஜமாக பேசுகிறார்கள், குறைந்த பட்சம் புரிந்து கொள்கிறார்கள். Continue reading சமஸ்கிருதம் பேசும் ஒரே இந்திய கிராமம்

Read more

“உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி

– சிலப்பதிகாரம்

காவிரி பாறைகளில் தவழ்ந்து மணல் வெளியை கடந்து வேர்களுக்கு விருந்து வைக்கும் வெறும் நன்னீர் நதி மட்டுமல்ல.

அது காலம் கடந்த ஒரு நாகரீகத்தின் வழித்தடம், இன்று சிதிலமைடந்த மாநிலங்களின் மக்கள் ஒரு மொழி பேசி ஒன்றாய் கலந்திருக்க உயிர் ஆதாரமாய் விளங்கிய அமிர்த பேரொலி.

வெறுப்பை உமிழ எரிந்துக் கொண்டிருக்கும் இரு மாநில கலவரத்திற்கு அச்சாரமாய் இந்நதி ஆனது காலத்தின் ஓலமே. அரசியல் சதுரங்கத்தில் அவல சிப்பாய்களாய் பரிதவிப்பது டெல்டா பாசன மக்களின் சாபம்.

metturdam2

காவிரியை `அன்னையின் அருளே வா வா வா, ஆடிப்பெருக்கே வா வா வா,‘ என்று அரவணைத்து ஆடிப் பெருக்கு என்று ஆற்றில் வரும் புது நீரை வரவேற்று மகிழ்வது தமிழ்நாட்டின் கலாச்சார நிகழ்வாகும்.

புகழ் பாடப்பட்டு பாய்ந்த காவிரி ஓய்ந்த காவிரியாகி மாய்ந்திருப்பது நிதர்சனம். ஆனால் இது எதோ சமீப கால அரசியல் நிகழ்வல்ல, பலகாலமாய் தொன்றுதொட்டு வரும் வரலாற்று ஈரம்.

உலகத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த அணையாக கருதப்படும் கல்லணை முதன்முதலாக கி.பி. 2ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் காவிரி மீது கட்டப்பட்டது.shivanasamudra-falls_india_17472

கி.பி.11 ஆம் நூற்றாண்டில் அன்றைய மைசூர் அரசு அப்போதே அங்கு அணைக்கட்டி இன்னல் கொடுத்தது. இரண்டாம் ராஜராஜன் தன் படைகளொடு சென்று அணையை உடைத்தெறிந்தான்.

கி.பி.17 நூற்றாண்டிலும் இதுபோல சம்பவம் நிகழ தஞ்சை மாராட்டிய மன்னரும் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவும் படை திரட்டி சென்றனர். Continue reading காவிரி பிரச்சினை : நேற்று முதல் ஆதி வரை

Read more

விநாயகர் சதுர்த்தி தினத்தை யொட்டி விநாயகர் சிலை விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிலும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சிலை வாங்குதலுக்கான விழிப்புணர்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்களிடம் அதிகரித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது .

விநாயகர் செய்யும் தொழில்கள் (பஞ்சகிருத்யங்கள்) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். எனினும் ஆறு மற்றும் கடல் வளங்களையும் உயிர்களையும் அழிக்கும் கடவுளாக மட்டுமே சுற்றுசூழல் ஆர்வலர்களால் அவர் பார்க்கப்படுகிறார்.

devotees_splash_water_on_an_idol_of_hindu_elephant_540e22ca12.JPG

சிறியளவிலிருந்து 75 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் 3 லட்சத்திற்கு மேலே மும்பை புறநகர் பகுதிகளில் கரைக்கப்படுகிறது. Plastic of paris போன்றவற்றால் உருவாக்கப்படும் சிலைகள் நீர் வளங்களை அழித்து அதிலுள்ள ஆக்சிசன் அளவை குறைக்க வாய்ப்புள்ளது.

கடந்த சில வருடங்களில் மீன்கள் இறந்து கரையில் மிதந்த அவலம் கூட நிறைவேறியுள்ளது. இவை மக்கா குப்பை போல, நீரோடு கலந்து அழியாது. அப்பகுதி முழுதுமே பாதிக்கப்படும்.

மக்கள் தங்கள் கடவுளை மகிழ்விப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளனர், தம்மை சார்ந்த சுற்றுசூழலை கவனிக்க மறந்து விடுகின்றனர்.

ஆனால் காலம் மாறியுள்ளது, பல இளைஞர்களும் சமூக தொண்டு நிறுவனங்களும் பல வகையான விழிப்புணர்வு மிக்க சிந்தனைகளை சதுர்த்தியில் நாம் அறிந்து கொள்வோம்.

மீன்களின் நண்பன் விநாயகர் (Fish friendly Ganesha):

Sprouts Environment Trust, துளிர் அல்லது முளைகள் என பொருள்படும் இந்த தொண்டு அமைப்பு பல காலமாகவே மும்பையின் கடல் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர். 2001 முதல் இவர்கள் உலர்ந்த சோளம் மற்றும் கீரைகளை பயன்படுத்தி விநாயகர் சிலை உருவாக்கும் பணியை தொடங்கினார்.

களிமண்ணால் செய்யப்பட்டு இயற்கை வண்ணம் பூசப்படும் இச்சிலைகள் மீன்களை அழிப்பதை விட்டு மாறாக கடல் மீன்களுக்கு உணவாக மாறுகிறது. சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பின்னர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி(#GodSaveTheOcean) மிகசிறந்த திட்டமாக பெரும் ஆதரவை பெற்றுவிட்டது. Continue reading சுற்றுசூழலை காக்கும் விநாயகர் சிலைகள்

Read more

மதுரை மாநகரையே குலுங்க வைக்கும் விழா, சித்திரை திருவிழா. குலுங்க வைக்கும் எனும் சொல்லும் போதே தெரியும் அது நம் கள்ளழகர் வைகையில் இறங்குவது தான் என்று.அந்தளவிற்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் இவ்விழா பிரபலமடைந்துள்ளது.முழுதாக ஒரு மாதம் எடுத்துக் கொண்டு உலகிலேயே அதிக நாட்கள் கொண்டாடப்படும் பிரமாண்ட பண்டிகை இதுவாகத்தான் இருக்கும்.

மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் இந்த திருவிழாவை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர். இப்பெருவிழாவின் முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும் அடுத்த 15 நாட்கள் அழகருக்கும் விழா நடைபெறுகிறது.

நிகழ்வுகள்

திருவிழாவின் முதல் நாள்  நிகழ்வு கொடியேற்றம் ஆகும். அன்று இரவு கற்பக விருட்சகம் மற்றும் சிம்ம வாகனத்தில் சுவாமி உலா வருகிறது. அடுத்த நாள் பூதவாகனம் மற்றும் அன்ன வாகனதிலும், மறுநாள் கைலாசபர்வதம் மற்றும் காமதேனு வாகனதிலும் வீதி உலா வரும். நான்காம் நாள் தங்கபல்லக்கிலும் ஐந்தாம் நாள் தங்க குதிரையிலும் எடுத்து செல்வார்கள்.

ஆறு மற்றும் ஏழாம் நாள் முறையே ரிஷப வாகனம், நந்தீஸ்வரர் வாகனம் மற்றும் யாழி வாகனத்திலும், எட்டாம் நாள் பட்டாபிசேகம் நடைபெறும். இரவு வெள்ளி சிம்மாசன வாகனம் சுவாமி உலா வருகிறது.திக்விஜயம் மீனாட்சி இமயமலை சென்று போர் புரிவதை கூறும் வகையில் நடைபெறுகிறது.அன்று இரவு இந்திரா விமான வாகனம்.

201401301517521201401301517528_l


Continue reading சித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்

Read more
Translate »