Search

மனிதன் என்றுமே தன் வெற்றுடலை மட்டுமே சார்ந்தவன் அல்ல. அதன் இயங்கு சக்தியாக ஆன்மா சர்வமும் பாய்ந்து கொண்டிருத்தல் வேண்டும். அதன் ஆற்றல் நம் அறிவிற்கு அப்பாற்பட்டது.

உடலால் செல்ல இயலாத பிரபஞ்ச வெளியில் கூட ஆன்மாவால் பயணிக்க இயலும். இதனை ஆங்கிலத்தில் Astral Projection( or Astral Travel) என்று சொல்வார்கள்.

அதாவது உங்கள் உடலை ஒரு இடத்தில் கிடத்தி உயிர் மட்டும் ஒரு புதிய பிரதேசத்தை அடையும் செயல். ஒருவகையான டெலிபதி போல.

உதாரணமாக அவதார் படத்தில் நாயகன் ஒரு பேழையில் அடைக்கபட்டு அவரது ஆன்ம உடல் மட்டும் வனத்தில் சென்று நாயகியோடு வசிப்பது போன்று காட்சி அமைக்கபட்டிருப்பதை சிந்தித்து பாருங்கள்.

இதனை Out of Body Experience என வழங்கும் மேற்கத்திய உலகத்தினர் இப்படியான அனுபவத்தை பெற பல்வேறு முயற்சிகளை கையாளுகின்றனர்.

19 நூற்றாண்டிற்கு பின்னர் தான் இதைப் பற்றிய பேச்சு புழக்கம் மேற்கத்திய கலாச்சாரத்தில் தொடங்கிருக்கிறது.

பல புதினங்கள், நாவல்கள்,திரைபடங்கள் என விளக்க இயலாத விஞ்ஞான கொள்கைகளுக்குள் தற்போது இது இணைந்துவிட்டது.

அஸ்திவாரமாக 17 நூற்றாண்டில் இம்மானுவேல் சுவிடன்பார்க் என்ற ஐரோப்பியர் ஆன்ம பயணத்தை பற்றி டைரிக் குறிப்புகள் எழுதி வைத்தார்.

அதன் பின்னர் பல்வேறு இலக்கியவாதிகள் இதனை முயன்றதாகவும் அதை பற்றிய விளக்கங்களை குறிப்பிட்டனர். இவர்களில் முக்கியமானவர் ராபர்ட் மோர்னி.

1971-94 வரையான காலத்தில் உடலை விட்டு வெளியேறும் அனுபவத்தை பற்றிய இவர் இயற்றிய புத்தகங்கள்(Journeys to other realms) மிக புகழ்பெற்றன, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கவும் பட்டன.

இவர் ஆன்ம பயணத்தை பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு இயக்கத்தையும் தொடங்கி தற்போது சில தன்னார்வளர்களை வைத்து சோதனைகள் செய்து வருகிறார்.

ஆன்மாவின் மற்றொரு நிலைக்கான(altered stats of consciousness) இவரது தேடல்கள் பலரை இந்த கொள்கையை பற்றிய மேலும் அறிய தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.

உடலை விட்டு வெளியேறும் ஆன்மாவின் சக்தியானது தூண்டுதல் மற்றும் தூக்கத்தின் போது நடைபெற்று சொர்க்கத்தின் பல்வேறு அடுக்கு பகுதிக்குள் நுழைவதாக சொல்கிறார்கள்.

பொதுவாக இரண்டு வழிகளில் ஆன்ம வெளிக்கு(Astral Plane) நாம் சென்றடைய முடியும். ஒன்று உறக்கத்தின் வழியே மற்றொன்று யோக முறைகளில்

Continue reading ஆன்ம பயணம் – மேற்கத்திய கனவுலகம்

Read more

பூமி இதுவரை ஐந்து மிகப் பெரிய பேரழிவை சந்தித்திருக்கிறது. கடைசியாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பேரிடர் டைனோசர் இனத்தின் தடத்தை அழித்தது.

கடந்த தலைமுறையிலேயே இதை பற்றி தெரிவித்த அறிவியலாளர்கள் தற்போது ஆறாவது அழிவு (Sixth Extinction) நாம் நினைப்பதை விட வேகமாக நிகழந்து கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இயல்புக்கு மாறான விலங்கினங்களின் அதிகப்படியான அழிவு சரிவிகிதம் மற்றும் புவியியல் மாற்றங்கள் அதனை உறுதிபடுத்துவதாகவே உள்ளன.

ஏற்கனவே பல்வேறு விலங்கினங்கள் காக்கப்படவேண்டிய பட்டியலில் இருக்கும் நிலையில் அவற்றின் வன உயிரியல் நிர்மூலமாதல்(Biological annihilation) சதவீதம் 110 ஆக அதிகரித்துள்ளது.

1990 முதல் இதுவரை 400 மேற்பட்ட கடல்-நில வாழ்பவை முழுவதுமாக அழியும் நிலையை சந்தித்துவிட்டன.
பல்வேறு முதுகெலும்பு விலங்குகள் தங்கள் பிழைக்கும் ஆற்றலை 30-40% மேல் இழந்து வருகின்றன.

மனித குரங்குகள், புலி இனங்கள் தாங்கள் ஆளும் பகுதியில் உயிர்பிழைக்கும் திறன் 20% ஆக சரிந்துள்ளது. விலங்குகளின் அவற்றின் மூன்றில் ஒரு பங்கு குணாதிசயத்தை மெல்ல இழந்து வருகின்றன.

Continue reading பூமியின் ஆறாவது அழிவு நெருங்கிவிட்டது

Read more

மணிரத்னம்-ரஹ்மான் கூட்டணியில் மீண்டும் ஒரு மாய வலை. இந்த இசை புயலில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிப்பதும் சுகமே.

காற்று வெளியிடை படத்தின் நல்லை அல்லை பாடல். அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து அடிமை கொள்கிறது.

ரஹ்மான் பாடல் தன்மையே இதுதானே. இளையராஜா பாடல்கள் ஆன்மாவோடு தொடர்பு கொண்டவை. ஆனால் ரஹ்மான் பாடல்கள் இசை கடவுளுக்கு சமர்பிக்கப்பட வேண்டியவை.

ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிதாய் ஒரு நுண்ணிசையை உணர முடியும். அத்துணை நுணுக்கங்கள் அதனுள் புதைந்திருக்கும்.

அதுவும் தமிழார்வம் கொண்ட மும்மூர்த்திகள் இணையும் போது அதன் தரம் விலைமதிபற்றதாகிறது.

ரஹ்மானின் இசை, வைரமுத்துவின் வரிகள், மணிரத்னத்தின் காட்சியமைப்பு.

இவற்றில் எது நம் மனதை கொள்ளை கொண்டது என பிரித்தரிதல் அரிது. சரி நல்லை அல்லை பாடலுக்கு வருவோம்.

இந்த பாடல் வரியின் அர்த்தம் மிக எளிது. நல்லை என்றால் நன்று. அல்லை என்றால் இல்லை என பொருள்படும்.

இச்சொல் குறுந்தொகையில் வரும் சொல்லேடு. தலைவியானவள் வெயிலில் வாடுவது நல்லை அல்லை என அதில் வரிகள் வரும்.

சங்க தமிழ் சொற்களை இயல்பாக பயன்படுத்த வைத்த பெருமை வைரமுத்துவையே சேரும். இவர்கள் இணைப்பில் உருவான நறுமுகை பாடல் ஒரு சிறந்த குறுந்தொகை உதாரணம்.

Continue reading ​நல்லை அல்லை – காற்று வெளியிடை

Read more

கொரிய நாட்டின் கிம் மக்கள் தங்கள் வம்சத்தின் தாயாக கருதும் ஒரு பெண்ணரசியை வணங்க இந்தியா நோக்கிய ஒரு யாத்திரையை வருடா வருடம் மேற்கொள்கின்றனர்.

இதற்கு காரணமாக இருப்பது கொரியாவின் பண்டைய கயா பேரரசின் முதல் ராணி இந்தியாவில் இருந்தே அங்கு குடியேறினார் என அவர்களின் வரலாற்று குறிப்புகள் கூறுவதே.

ஹியோ ஹியாங் ஓக் (Heo Hwang Ok) என்ற பெயர் கொண்ட அவர்தான் கொரியா நாட்டு வரலாற்றில் முதல் அரசியும் ஆவார். அவருக்கு இந்திய – கொரிய தூதரங்களால் அவரின் தாய் தேசமான அயோத்தில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

ஆனால் அயோத்திக்கும் அவருக்கும் தொடர்பில்லை, அவள் ஒரு தமிழ் தேச இளவரசி என சமீபத்தில் வரலாற்றாளர்கள் சாட்சியளிக்கின்றனர். அப்படியானல் அயோத்தியில் ஏன் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது என தெரிவு கொள்ள வேண்டியதை பற்றியதே இந்த பதிவு.

இல்யோன் என்ற புத்த துறவி 13 ஆம் நூற்றாண்டில் பண்டைய கால கொரிய தேசத்தின் வரலாற்றையும் புனை சரித்திரங்களையும் தொகுத்து சம்குக் யுசா(SAMGUK YUSA) என்ற மூவேந்தர் வரலாற்றை எழுதினார்.

அவர் குறிப்பிட்டுள்ள பண்டைய நாயகர்களின் சாகச இதிகாச புராண கதைகளில் தான் இந்த அரசியை பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன. Continue reading செம்பவளராணி – முதல் கொரிய அரசி

Read more

தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் புனிதமாக கருதப்படுவது பசும்பால். இந்து சமயத்தின் பாரம்பரியம் தொட்டே பால் ஒரு முக்கிய மங்கலகர பொருளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

புதுமனை புகும் போது பால் காய்ச்சுவது, பால் ஊற்றி பிராத்தனை செய்வது என மரணத்தின் விளிம்பில் கூட பால் பயன்படுத்துவது நவீனத்தின் எல்லைக்கு சென்றாலும் நம் மரபில் இன்னும் தொடரும் வழக்கம்.

பால் தூய்மையின் அடையாளமாக கருத்தபடுகிறது, சற்றே கவனித்தால் மற்ற நாகரீகங்களை விட தமிழர்களே வெண்மையை பெரிதும் மதித்தாக தெரிகிறது. மேலும் அது வளமையையும் செழிப்பையும் குறிப்பதாக இருக்கிறது.

Screenshot_2015-12-01-22-40-56.png

மணப்பெண் சாந்தி முகூர்த்த அறையினுள் நுழையும் போது அவள் மணமகனுக்கு அதிர்ஷ்டத்தையும் வளமையையும் அளிக்கிறாள், மறைமுகமாக ஒரு ஆணுக்கான கவுரவத்தை தருகிறாள்.

Continue reading முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு?

Read more

உங்களை சுற்றி இருப்பவர்களை கவனியுங்கள், ஏதாவது வித்தியாசமாக காண முடிகிறதா? கண்கள், அழகிய முகங்கள் விட்டு அவர்களது முடியை பாருங்கள் அல்லது அதன் இல்லாமையை.

இது அவ்வளவு வித்தியாசமான ஒன்றாக தெரிய வாய்ப்பில்லை, ஏனெனில் நாம் இயல்பாகவே ஓரளவிற்கு ரோமத்தை தேகத்தில் கொண்டுள்ளோம். ஆனால் மீதமுள்ள பாலூட்டிகள் மற்றும் நமக்கு நெருக்கமான உறவினர்களான மனிதக் குரங்குகளை ஒப்பிடும் போது,

CpATt04W8AA_Wza.jpg

மனிதன் மட்டுமே ரோமங்கள் குறைவாக உள்ள பெரிய உடலுள்ள பாலூட்டி இனம்.மேலும் குரங்குகளை போலல்லாது நமது தோலின் பெரும்பகுதி காட்சிப்படுத்தப்படுகிறது.

அதிகப்படியான ரோமங்கள் பயனுள்ள போதிலும் நாம் அவ்வாறே பரிணமித்துள்ளோம். அடர்த்தியான முடி அதிகளவு குளிர் போன்ற சூழலை கடத்தாமல் தோலை காக்கிறது, சில சமயங்களில் உருவத்தை மறைத்து கொள்ளவும் உதவுகிறது.

இவ்வளவு சாதகமான ஒன்றானால், நாம் ஏன் அதனை பெருமளவு இழந்துள்ளோம்?

Continue reading மனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்?

Read more

பழமொழிகள் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற அனுபவ குறிப்புகள்.ஒவ்வொரு நாட்டிலும் பழமொழிகள் அதன் சமூக பண்பாட்டு பெருமையும் அறிவுத்திறனையும் எடுத்துக் காட்டுகிறது.பொதுவாக பேசும் போது எளிதாக விளங்க, உதாரணம் சொல்ல இவை பயன்படுகின்றன.

நம் செந்தமிழிலும் எத்துணையோ அற்புதமான பழமொழி உள்ளது, அதில் சிலவற்றை வட்டார வழக்கிற்கு மாறி மருவியது என்ற பெயரில் நம்மாளுங்க எப்படி வச்சு செஞ்சிருக்காங்கனு பாக்கலாம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்.

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.

  • தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்து வரும் மனிதன், யாசகன் கேட்பவன் அர்த்த ராத்திரியில வந்தாலும் கொடை கொடுப்பானாம், அவனையே அற்பனாகிடாங்க.

  • புது மொழி : அற்பனுக்கு வைபை கிடைத்தால் அர்த்த ராத்திரியிலும் அப்டேட் செய்வான்.(#Twitter)

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்.

  • அடி என்பது ஔவையாரின் நாலடி, அதன் தத்துவத்திற்கு இணையாக சகோதரன் கூட உதவ மாட்டான். அதுபோல் அடி என்பது இறைவனின் திருவடி எனவும் சொல்கிறார்கள், எல்லாம் போனதுக்கப்புறம் கடைசியில் இறைவன் தானே.

  • இன்னொரு பார்வை :

    இருப்பினும் ஏற்றுக்கொள்ளமாறு இருப்பது நில அடி தான். அண்ணன் தம்பி கை விட்டாலும் சொந்தமாக சில அடி நிலம் இருந்தால் அது உனக்கு உதவும்.அடிதடி இல்ல.

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்.

ஆயிரம் வேரை (மூலிகை வேரை) கொன்றவன் அரை வைத்தியன்.Ayiram Death

  • சித்த வைத்திய முறைகளில் மூலிகைகளை தெரிந்து வைக்கிறது மிக அவசியம்.குறைத்தது ஆயிரம் மூலிகைகளின் தன்மை அறிந்தவனே அரை வைத்தியன். பின்ன ஆயிரம் பேர கொன்ன சும்மாவ விடுவாங்க.

களவும் கற்று மற.

களவும் கத்தும் மற.

  • ஊரில் பலர் தவறு செய்யும் போது சொல்வது அல்லது அவர் நண்பர் சொல்வது.ஆனால் கத்து என்பது தூய தமிழில் பொய் அல்லது கயமை என்பதாய் பொருள். திருடுறதையும் ஏமாற்றுவதையும் மறக்க சொல்லிருக்கு,கத்துகிட்டது அப்புறம் இல்ல.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு.

Read more

1860-ல் ஏப்ரல் 1 அன்று லண்டன் நகரவாசிகளுக்கு ஒரு அழைப்பு சீட்டு பிரசுரிக்கப்பட்டது.அதில் “லண்டன் கோபுரத்தில் வருடாவருடம் நடக்கும் வெள்ளை சிங்கங்களை குளிப்பாட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது.மக்கள் வெள்ளை கதவு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.”

Tower of London: Admit Bearer and Friend to view annual ceremony of Washing the White Lions on Sunday, April 1, 1860. Admittance only at White Gate.

Tower-of-London

அன்று மதியமே கட்டுக்கதையை நம்பி மக்கள் அனைவரும் திரளாக சென்று வெள்ளை கதவின் வாசலில் காத்திருந்தினர்.பின்னர் அவர்கள் முட்டாளாக்கப்பட்டனர் என்பதுமின்றி பல வருடங்களாகவே அங்கே சிங்கங்கள் வசிக்கவில்லை என்றும் உணர்ந்தனர்.

முட்டாள்கள் தினம் வரலாற்றில் இதுபோன்று பல நிகழ்வுகள் மக்களை வெறுப்பேற்றி வேடிக்கை செய்துள்ளன.

என் நினைவில் இருப்பதோ பள்ளி காலத்தில் என் நண்பன் என்னை ஏமாற்றி சம்பவங்கள் தான்.ஏப்ரம் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்பதால் ‘டேய் உன் சட்டையில் யாரோ இங்க் அடிச்சுடான்டா,முதுகுல பாரு’.நானும் தேடிதேடி பார்த்து ஒருகட்டத்தில் சட்டையை கழட்டி தேடிவிட்டேன்,காது கிழிய ஏப்ரல் ஃப்ல் சத்தம் மட்டுமே கேட்டது.அப்புறம் என்ன நானும் அவனோடு சேர்ந்துக் கொண்டு அடுத்து வந்தவனை ஏமாற்றினோம்.

ஆனால் இவையெல்லாம் எங்கிருந்து தொடங்கியது? அதற்கு பல விளங்கங்கள் உள்ளது.

Continue reading முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

Read more
Translate »