சினிமா

எந்திரன் படத்தில் ரஜினி மற்றும் அக்‌ஷய் குமாரின் பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளிவந்து ஏற்கனவே எதிர்பார்ப்பை ஹைப் ஆக்கியுள்ளன.

தற்போது எமி ஜாக்சன் தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் 2.0 படத்தில் தனது ரோல் தொடர்பான பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டு மெர்சலடைய செய்துள்ளார்.

ரோபோ உடையில் அசத்தும் அழகியாக தோற்றமளிக்கிறார் எமி. சும்மாவே இவர் அழகு காட்டுவார், அதுவும் சங்கர் படத்தில் ரோபோ தோற்றத்தில் என்றால் இப்பொது பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது ரசிகர்களுக்கு.

முன்னர் வெளிவந்து பர்ஸ்ட் லுக் போலவே இதிலும் உலகம் மனிதர்களுக்கான இடம் மட்டுமில்லை எனும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

எனவே மனிதர்களை கட்டுபடுத்தும் அதிநுட்ப சிட்டி போன்ற ரோபோக்களா அல்லது ஏலியன்கள் தமிழ் சினிமாவிற்கு வரவிறுக்கிறதா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more

தமிழ் திரையுலகம் அவ்வப்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படங்களை அளித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இருப்பினும் பாலியல் தொடர்பாக குறிப்பிடதக்க வகையில் பதியபட்ட படம் அதிகமில்லை. அப்படியே வெளியானலும் அவை கேளிக்கை அல்லது ஆக்‌ஷன் படமாகவே காட்சிபடுத்தப் படுகின்றன.

சமீபத்தில் பாகுபலி 2 படம் ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கும் அதே நேரம் “லென்ஸ்” திரைப்படம் நம் கண்களுக்கு தெரியாமலே திரையரங்குகளில் இருந்து ஓடி மறைந்துக் கொண்டிருக்கிறது.

மலையாளம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டு பல திரைப்பட விழாக்களில் விருது பெற்ற இப்படம், மக்கள் மறைமுகமாக பார்க்கச் செல்லும் படமாக மாறி வருகிறது.

LENS is A must watch adult film என பலதரப்பில் இருந்து வரவேற்பு வருகிறது. தி இந்து விமர்சகர் A porn with silver spoon என கொண்டாடுகிறார்.

வெற்றிமாறன் வெளியிட்டு பிரபல படுத்தினாலும் திரை அரங்குகளில் குறைவான காட்சி இடப்பட்டுள்ளதால் எல்லோருக்கும் சென்று சேரவில்லை என்பதே உண்மை.

மற்றொன்று ‘A’ கிரேட் அளித்திருப்பது. அதன் காரணம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சிறந்த கதையாக இது இருப்பது தான்.

இப்படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் பேட்டி ஒன்றில் சொன்னதை போல A என்றால் அடல்ட் என்பதிற்கு பதில் அசிங்கம் என நினைக்கும் எண்ணத்தை மாற்ற வேண்டும்.

இணைய அத்துமீறல் வழியாக பாதிக்கப்பட்டு தன் வாழ்வை தொலைத்த ஒருவன் அதே இணையத்தின் மூலம் எப்படி பழி வாங்குகிறான் என்பதே கதை.

அந்தரங்க வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கோலோச்சுவதை எடுத்துக்காட்டி கடைசி வரை இமை மூடவிடாமல் விறுவிறுப்பாக திகிலடைய செய்கிறது திரைக்கதை.

இந்த படம் தொடங்கிய சில நிமிடங்களிலே நம்மை குற்றவாளி கூண்டில் நிக்க வைத்து விட்டுதான் மற்ற காட்சிகள் நகர்கின்றன. கதிரின் ஒளிப்பதிவு நம்மை அந்த அறைக்குள் ஒளிந்து கொள்ள வைக்கிறது. Continue reading லென்ஸ் – திரைப்பார்வை

Read more

மணிரத்னம்-ரஹ்மான் கூட்டணியில் மீண்டும் ஒரு மாய வலை. இந்த இசை புயலில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிப்பதும் சுகமே.

காற்று வெளியிடை படத்தின் நல்லை அல்லை பாடல். அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து அடிமை கொள்கிறது.

ரஹ்மான் பாடல் தன்மையே இதுதானே. இளையராஜா பாடல்கள் ஆன்மாவோடு தொடர்பு கொண்டவை. ஆனால் ரஹ்மான் பாடல்கள் இசை கடவுளுக்கு சமர்பிக்கப்பட வேண்டியவை.

ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிதாய் ஒரு நுண்ணிசையை உணர முடியும். அத்துணை நுணுக்கங்கள் அதனுள் புதைந்திருக்கும்.

அதுவும் தமிழார்வம் கொண்ட மும்மூர்த்திகள் இணையும் போது அதன் தரம் விலைமதிபற்றதாகிறது.

ரஹ்மானின் இசை, வைரமுத்துவின் வரிகள், மணிரத்னத்தின் காட்சியமைப்பு.

இவற்றில் எது நம் மனதை கொள்ளை கொண்டது என பிரித்தரிதல் அரிது. சரி நல்லை அல்லை பாடலுக்கு வருவோம்.

இந்த பாடல் வரியின் அர்த்தம் மிக எளிது. நல்லை என்றால் நன்று. அல்லை என்றால் இல்லை என பொருள்படும்.

இச்சொல் குறுந்தொகையில் வரும் சொல்லேடு. தலைவியானவள் வெயிலில் வாடுவது நல்லை அல்லை என அதில் வரிகள் வரும்.

சங்க தமிழ் சொற்களை இயல்பாக பயன்படுத்த வைத்த பெருமை வைரமுத்துவையே சேரும். இவர்கள் இணைப்பில் உருவான நறுமுகை பாடல் ஒரு சிறந்த குறுந்தொகை உதாரணம்.

Continue reading ​நல்லை அல்லை – காற்று வெளியிடை

Read more
Translate »