நாககன்னி

நாகமாணிக்கம்

நாகமாணிக்கம் உண்மையா என்கிற விவாதங்கள் ஏதோ ஒரு மூலையில் இந்த நொடியில் கூட பேசப் பட்டுக்கொண்டிருக்கும். அந்த அளவிற்கு இந்த அதிசய கல்லை பற்றிய செய்திகள் இந்திய தெருக்களில் பரவிக் கிடக்கின்றன.

எண்ணற்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூட இதை பற்றிய குறிப்புகள் உள்ளன. மர்மங்கள் சுவாரசியமானவை, நம்மை தேடலுக்கு உட்படுத்துபவை. அந்த உந்துதலே நாக மாணிக்கத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

நாகமாணிக்கத்தை சினிமா வழியாகவோ அல்லது நமக்கு தெரிந்தவர் அவர் கேள்வி பட்டதாய் சொன்ன கதையினாலோ நாம் அறிந்திருப்போம்.

இந்த கதைகளின் பொது அம்சமான வரும் நாகம் 100 வருடங்கள் தங்கள் விஷத்தை உபயோக்கிக்காது, ஏதும் யாரையும் தீண்டாமல் அது காத்து வரும் அதன் விஷம் காலப்போக்கில் நாகரத்தினமாக மாறும். சுனை அருகே வெறும் பச்சை தவளைகளை மட்டுமே உண்டு இது உயிர் வாழும்.

ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். இப்படிப்பட்ட நாகங்கள் சாதுக்கள் போல முதுமை என்பதே கிடையாது, சுமார் 110-150 ஆண்டுகள் வரை வாழக்கூடியன.

நாகமாணிக்கம்.jpg

கண்கூசும் அளவிற்கு பகலில் கூட மிக பிரகாசமாக மின்னும் அந்த ரத்தினத்தை அமாவாசை இரவில் கக்கி எடுத்து அதன் வெளிச்சத்தில் வேட்டையாடும். இது போன்ற சமயத்தில் தான் நம் கதைகளில் வரும் நபர் மாட்டின் சாணத்தையோ அல்லது பொடியையோ அந்த நாகமணியின் மீது வீசுவார்.

நாகம் சற்று குழம்பி அவ்விடத்தை விட்டு சென்றபின் மரத்தின் மேல் மறைவாக இருந்த நாயகன் நாகமணியை கைப்பற்றிக் கொள்வான்.

வராகமிகிரரின் பிருகத்சம்கித புராணத்தில் நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் செய்வான் என சொல்லப்பட்டுள்ளது. Continue reading நாக மாணிக்கம் – பிரபஞ்ச இருளில்

Read more
Translate »