நாசா

புது கிரகம் தேடி வாழ்விடம் அமைப்பது நம் எல்லோர் ஆழ்மனதிலும் உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு கனவு. அதிலும் செவ்வாய் கிரக பயணத்திற்கு நம்மக்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர்.

நாசா விஞ்ஞானிகள் தொடங்கி ஆங்கில திரைப்படங்கள் தொடர்ந்து மக்களின் மனதில் செவ்வாய் குடியேற்ற கனவை மெல்ல மெல்ல பதிய வைத்துவிட்டனர்.

earth from moo

2010 ஆம் ஆண்டு முதலே மக்களை செவ்வாய் கிரகத்திற்கு குடியேற்றுவதற்கான திட்டத்தில் தீவிரமாக உள்ளது நாசா, அதிலும் SpaceX என்ற நிறுவனம் 2024 லின் தொடக்கத்தில் செவ்வாய் காலணியை உருவாக்குவதில் திட்டவட்டமாக உள்ளது எனபதை அதன் தலைவர் எலான் மஸ்க்(Elan Musk) ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

mars one

மேலும் 2012ல் தொடங்கப்பட்ட MARS ONE திட்டம் உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட100 நபர்களுக்கு செவ்வாயில் வாழ்வமைக்க பயிற்சி கொடுத்து வருகிறது. திருப்ப வருவதற்கான எண்ணமே இல்லாத பயணத்தில் 2027-ல் அங்கு தரையிறங்க உள்ளது.

Continue reading நிலவில் குடியேற வேண்டிய நேரம் இது

Read more

Scroll down Read this Article in English

   தண்ணீரில் சில வேதி பொருட்களை சேர்ப்பதன் மூலம் குமிழ்களை உண்டாக்குவது இன்றைய நாட்களில் பெரிய ஆச்சர்யமில்லை.ஆனால் அதையே ஈர்ப்பு விசை(microgravity) அற்ற மிதக்கும் விண்வெளியில் நிகழ்த்தினால் !

   சர்வதேச விண்வெளி நிலையத்தில்(ISS) பதிவு செய்யப்பட்ட அப்படியொரு அற்புதமான ஒளிப்படத்தை தான் நாசா தற்போது வெளியிட்டுள்ளது. மிதக்கும் தண்ணீர் மெல்ல வேதிச்சேர்க்கையின் மூலம் நிறம் மாறி குமிழ்கள் உருவாகும் அசத்தலான காட்சியை கீழே ரசிக்கலாம்.

[youtube https://www.youtube.com/watch?v=bKk_7NIKY3Y]

 

   Epic Dragon எனப்படும் அதிநவீன தொழில்நுட்ப புகைப்பட கருவியின் மூலம் பதிவு செய்யப்பட்டது இந்த ஒளிக்காட்சியின் வசிகரத்துக்கு முக்கிய காரணம்.விண்வெளி நிலையத்திற்கு இந்த வருட தொடக்கத்தில் அளிக்கப்பட்ட இந்த ஒளிப்படக் கருவியின் மூலம் காட்சிகளை முன்பை விட ஆறு மடங்கு தெளிவாக காண முடியும்.

Continue reading விண்வெளி நிலையத்தில் மிதக்கும் குழிழ்கள்

Read more
Translate »