வித்தியாசமான கிராமங்கள்

கர்நாடகா மாநிலத்தின் சிமோகா நகரத்தின் அருகில் உள்ள கிராம் மக்கள் பெரும்பாலும் அனைவருமே சமஸ்கிருத மொழியை பேசுகிறார்கள். இந்தியாவில் இன்னமும் சமஸ்கிருத மொழி வழக்கில் உள்ள அரிய இடங்களில் மத்தூர் கிராமமும் ஒன்று.

சமஸ்கிருதம் உலகின் பழமையான மொழிகளின் ஒன்று. லத்தீன், கிரீக் மொழிகளோடு ஒப்பிடதகுந்த இந்திய மொழி. இந்தியாவின் புராண இதிகாசங்கள், வேதங்கள் எல்லாம் இம்மொழியில் உருவாக்கப்பட்டது தான். ஆனால் நவீன இந்தியாவில் இந்தி போன்ற வழக்கு மொழிகளால் சமஸ்கிருதம் வழக்கற்று போனது. நடைமுறையில் பயன்படுத்தும் பழமையான மொழிகளில் தமிழ் மட்டுமே உயிர்த்துள்ளது.

இந்திய- ஆரிய நாகரீகத்தின் தாக்கமே சமஸ்கிருதத்தின் உருவாக்கம், மேலும் பல இந்திய மொழிகளுக்கு இதுவே அடிப்படை, தென்னிந்திய மொழிகளுக்கு தமிழ் போல.

sanskrit-class

புராதாண மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தை இவர்கள் தினசரி பேச்சு வழக்கில் இன்றும் உயிர்ப்போடு வைத்திருப்பாதல் இந்த கிராமம் மொழி ஆர்வலர்களால் பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. டெல்லியில் உள்ள சமஸ்கிருத மொழி பாதுகாப்பு மையம் தனது ஒரு கிளையை இங்கேயும் தொடங்கியுள்ளது.

தற்போது உலகில் 1% அள்விலேயே சமஸ்கிருதம் பேசப்படுகிறது, அதுவும் பிராமண பூசாரிகள் பயன்படுத்துவதே. ஜெர்மன்,பிரென்சு போல பள்ளி கல்லுரிகளில் கடினப்பட்டு பயலும் இந்த மொழியை இங்குள்ள பாமர மக்களும் சகஜமாக பேசுகிறார்கள், குறைந்த பட்சம் புரிந்து கொள்கிறார்கள். Continue reading சமஸ்கிருதம் பேசும் ஒரே இந்திய கிராமம்

Read more

இமயமலை வெண் அழகாக ரசிக்கப்படுகிறது. இயற்கையின் பிரமித்த படைப்பாற்றலின் அடையாளமாகவுகம் அதிசயிக்கப்படுகிறது. ஆனால் அங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள், சர்ச்சைகள் உலவுகின்றன. அதில் பல நாம் முற்றிலும் அறியாதவை.

ஆப்பிளும் தேயிலையும் வளரும் அதே இமயத்தில் கஞ்சா போன்ற கன்னாபீஸ்(Cannabis) செடிகளும் வளர்கின்றன. இந்த போதை பயிர்கள் இயற்கை வாழ்விடம் கொண்டவையாயினும் அவை அரசால் தடை செய்யப்பட்டவை.

அதே சமயத்தில் இமாலயத்தின் சிறிய கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தோடு இது கலந்திருக்கிறது. கஞ்சா செடிகளின் மூலம் தங்களது அஸ்திவார வாழ்வாதரத்தை இவர்கள் அமைத்துக் கொண்டுள்ளனர்.

02cannabis_farmers-ngsversion-1454355000674-adapt-536-1

Continue reading கஞ்சா வளர்க்கும் இமயமலை கிராமங்கள்

Read more

கேரளாவின் திருச்சூரில் உள்ள அழகிய கிராமம் மரோட்டிச்சல்(Marottichal). பல அழகான இயற்கை தலங்கள் கொண்ட இவ்விடம் பலரால் அறியப்படாத சுற்றுலா தலம்,ஆனால் அவ்வூரில் உள்ள உன்னிகிருஷ்னண் உணவகத்தை உலகில் பலருக்கு தெரியும்.

%e0%b4%ae%e0%b4%b0%e0%b5%8b%e0%b4%9f%e0%b5%8d%e0%b4%9f%e0%b4%bf%e0%b4%9a%e0%b5%8d%e0%b4%9a%e0%b4%be%e0%b5%bd_%e0%b4%b5%e0%b5%86%e0%b4%b3%e0%b5%8d%e0%b4%b3%e0%b4%9a%e0%b5%8d%e0%b4%9a%e0%b4%be%e0%b4%9f

60-70 களில் இந்த பகுதியில் குடித்தனம் வாழ்ந்தவர்களில் பெரும்பங்கு குடியோடு வாழ்ந்திருக்கின்றனர். கள்ளுக்கு அடிமையாகிய ஆண்களால் ஒவ்வொரு குடும்பமும் அளப்பரிய துன்பத்தை அனுபவித்தது.குடும்ப தகராறும் வன்முறையும் தெருவெங்கும் அரங்கேறியது.

எல்லை மீறிய குடிப்பழக்கம் தொடர இந்த ஊர் மக்கள் சேர்ந்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்..அதிகாரிகள் தினமும் ரோந்து வந்து கிராமத்தை கட்டுக்குள் கொண்டுவர துவங்கினர்,அதுவரை போதையை பொழுதுபோக்காக கொண்டவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அதே சமயம் சமகால நிகழ்வாக பாபி பிஷ்ஷர் என்பவர் உலகின் சதுரங்க வெற்றியாளராக முடிசூடினார்.உலகின் எல்லா செய்திதாள்களிலும் அது வெளியானது,இந்த கிராமத்து இளைஞன் உன்னிகிருஷ்ணன்(16) கையிலிருந்த செய்திதாளில் அவரது சதுரங்க நுணுக்கத்தை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருந்தான்.

Continue reading சதுரங்கத்தால் மதுவை வீழ்த்திய கிராமம்

Read more
Translate »