Animals

வௌவால்கள் பறவையா பாலுட்டியா?

வௌவால்கள் பாலுட்டி இனத்தை சேர்ந்தது, பாலுட்டிகளில் பறக்கவல்ல ஒரே இனம் வௌவால்கள் தான்.முதுகெலும்பு உள்ள இவை ஆந்தைகளைப் போலவே இரவில்தான் செயல்படும்.இவற்றின் முன்னங்கைகளே இறக்கைகளாக பரிணமித்துள்ளன. இறக்கை கால் மற்றும் முதுகு புறம் வரை ஜவ்வு போல இணைந்து அமைந்திருக்கின்றன.

வௌவால்கள் பார்ப்பதற்கு எலிகளின் வழிதோன்றல் போல இருப்பினும் இவை தனிப்பட்ட பரிணமித்த வகையை சேர்ந்தது .கிட்டத்தட்ட 52 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த வௌவால் தடயங்கள் கூட கிடைத்துள்ளன.

Divider R

வௌவால்களுக்கு கண் தெரியுமா?

மனிதனால் 80 முதல் 20 ஆயிரம் அதிர்வெண் அலைகளை உணர முடியும்,அதே சமயம் வௌவால்களால் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் வகையான ஒலி அலைகளை உணர முடியும்.

ஏன் வௌவால் தலைகீழாக தொங்குகிறது?

இரவில் பறக்கும் போது மீயொலி அலைகளை அனுப்பி அவை எதிரில் இருக்கும் சுவர் அல்லது பொருட்களில் மீது மோதித் திரும்ப வருவதைக் கொண்டு அதன் தொலைவைக் கணக்கிடும் தகவமைப்பு அதற்கு உண்டு.

இத்தகவமைப்பின் மூலம் எதிரில் இருக்கும் பொருட்கள் அல்லது உயிரினங்கள் இருக்கும் தூரத்தை மட்டுமல்ல உடல் அளவைக்கூட கண்டுபிடிக்க முடியும்.

வௌவால்களுக்கு பார்வைத் திறன் உண்டு,ஆனால் அவற்றின் கண்கள் பெரிதாக பரிணாம வளர்ச்சி அடையாதவை.மேலும் அவை உணவிற்காகதான் மீயொலிகளை உபயோக்கிறது, இனப்பெருக்கம் போன்ற மற்ற செயல்களுக்கு அவை தன் கண்களையே பயன்படுத்துகின்றன.

உலகின்  சிறிய வகை வொவால் 2.4 இன்ச் (3 CM) மற்றும் பெரிய வௌவால் 5.6 (1.8 M) அடி உயரம் ஆகும்.

Divider R

ஏன் வௌவால் தலைகீழாக தொங்குகிறது?
Continue reading வௌவால் – இரவுலகின் சாத்தான்கள்

Read more

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ….
– நக்கண்ணையார், அகம். 252 : 1-4

அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

u

புராண மிருகமான யாளி தமிழக கோவில்களில் பரவலாக காணப்படுகிறது. இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் இந்த பிரமாண்ட புராண விலங்கின் உருவத்தை சிலைகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆன்மீகம் :

ஒரு சுவரசியமான கதையோடு துவங்குவோம்.

யாளி என்ற மிருகமானது நவகிரகங்களின் ஒன்றான புதனின் வாகனம்.யாளியை போலவே புதனும் இரு பாலினத்தையும் சார்ந்திராதவர்.சில நேரங்களில் அவர் பெண்ணாகவும் பொதுவாக ஆணாகவும் சித்தரிக்கபடுகிறார்.

இதற்கான பிண்ணனி கதை கதாநாயகன் சந்திரனின் காதலில் தொடங்குகிறது.இரவின் நாயகனான நிலவன் தாரா என்ற பெண்ணோடு காதல் வயப்பட்டு அவளை தன்னுடன் அழைத்தும் வந்துவிட்டார்.ஆனால் தாராவோ தேவர்களின் குருவான பிரகாஸ்பதியின் மனைவி(!?).

Continue reading யாளி – கடவுள்களின் பாதுகாவலன்

Read more

Scroll down to read this article in English

சீனாவில் சுண்ணாம்புப் பாறைகளுக்கு அடியில் உலகின் மிகச்சிறிய நத்தை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆய்வாளர்கள் இந்த நத்தைக்கு, ‘அகஸ்டோபிலா டோமினிகே'(Angustopila dominikae) என்று பெயரிட்டு இருக்கின்றனர்.

0.3 இன்ச் அளவு உயரமும் 5 மி.மீட்டருக்கும் குறைவான அளவிலும் உள்ள இந்த நத்தையே உலகின் மிகச்சிறிய நத்தையாக இருக்கும் என இதை கண்டுபிடித்த வல்லுனர் குழு கருதுகிறது.

ஒரு ஊசியின் துவாரத்தில், 10 நத்தைகளை வரிசையாக வைக்கக் கூடிய அளவுக்கு இவை சிறியவை என்றால் இதன் உருவத்தை கற்பனை செய்து பாருங்கள்.

Continue reading உலகின் மிகச்சிறிய நத்தை!

Read more
Translate »