tamil technology news

ரோபோக்கள் உலகின் வல்லமை வாய்ந்த ஆதிக்க சக்தியாக மாறிவருகின்ற யுகம் நம் கண்ணேதிரே நடந்துக் கொண்டிருக்கிறது.

இது டெர்மினேட்டர் படத்தில் வருவது போலவோ, எந்திரன் சிட்டி போன்றோ அழிக்கும் ஆற்றலாக இல்லாமல் ஒரு ஆக்க புரட்சி போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

robotic-process-automation

தற்போதைய கணக்கெடுப்பின் படி உலக தரம் வாய்ந்த பல தொழில் நிறுவனங்கள் மனித ஊழியர்களுக்கு மாற்றாக தொழிற்நுட்ப திறன் கொண்ட தானியங்கி இயந்திரங்களை(Robots) பயன்படுத்த தொடங்கிவிட்டன என தெரிவிக்கிறது.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் ஆபத்தான மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கென தனித்தன்மை வாய்ந்த எந்திரங்களை பணிக்கு அமர்த்தியுள்ளன.

எஃகு, கார் போன்ற பல்வேறு உற்பத்தி ஆலைகளை எந்திரங்களை வைத்தே முழுவதுமாக கையாளுக்கின்றனர். இதனால் பணி இழக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

robotic-automation

இந்த விஞ்ஞானம் பத்திரிக்கை துறையையும் தற்போது ஆக்கிரமித்து வருகிறது என்பது அதிர வைக்கும் புதினமே.

Continue reading ஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்

Read more

Archelis (“நடக்கக்கூடிய இருக்கை” என அர்த்தம்) என்பது வெகு நேரம் நின்று கொண்டே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ பணியாளர் களுக்காக கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஒரு அதிநுட்ப ஜப்பானிய படைப்பு.இதனால் ஒருவர் நின்று கொண்டே செய்ய வேண்டிய வேலைகளை சோர்வில்லாமல் செய்து முடிக்கலாம்.

 

அதிலும் நின்று கொண்டே பணிபுரியும் மற்ற தொழிலாளர்களான பல்பொருள் அங்காடி ஊழியர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள், தொழிற்சாலை பணியாளர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற பலருக்கு இது கை கொடுக்கும்.

இதனை அணிந்து கொண்டால் வெகுநேரம் நிற்பவர்களுக்கு ஒரு சப்போர்ட் தேவைப்படும்போது நாற்காலியாக  மாற்றி அதனை   பயன்படுத்திக் கொள்ளலாம்.எங்கே நாற்காலி என தேடி அலைய வேண்டியதில்லை.இதன் வழியே  வெகு நேரம் நின்று கொண்டே இருப்பதால் வரும் நோய்களையும்  தடுக்கலாம்.

Continue reading நின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்?

Read more
Translate »